முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: சபரிமலை சென்ற பஸ்ஸில் தீ விபத்து

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      இந்தியா
Kerala 2024-11-17

Source: provided

கேரளா : கேரளத்தில் சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், சபரிமலை பக்தர்களை ஏற்றிச் செல்வதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லை நோக்கி அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்த பேருந்து சாலக்காயத்துக்கும் நிலக்கல்லுக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் 30வது ஹேர்பின் வளைவில் அதிகாலை 5.30 மணியளவில் வந்துகொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. பேருந்தில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு பம்பை மற்றும் நிலக்கல்லில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து பகுதியளவில் சேதமடைந்த போதிலும், காலியாக சென்ற பேருந்து என்பதால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீவிபத்தைத் தொடர்ந்து தேவசம்போர்டு உறுப்பினர் அஜிகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவரவில்லை. மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து