முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று துறைகளுக்கு மூடுவிழா: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை : தி.மு.க. அரசு தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் சிறு சேமிப்பு இயக்குனரகம் உள்ளிட்ட 3 துறைகளுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்த பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம், அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம்,அரசு காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறோம், அரசின் நிதி நிர்வாகத்தை சீர்செய்யப் போகிறோம்;, மக்களுக்கான நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, அனைத்திலும் படுதோல்வியடைந்து தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. 

அம்மா அவர்களின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மகளிர் இரு சக்கர மானியம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை முடக்கிய தி.மு.க. அரசு, தற்போது அரசு தகவல் தொகுப்பு விபர மையம், ஓய்வூதிய இயக்குனரகம், சிறு சேமிப்பு இயக்குனரகம் போன்றவற்றை கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையுடன் இணைத்து, மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்தி அரசாணை பிறப்பித்துள்ளது பொதுமக்களிடையே குறிப்பாக அரசு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தி.மு.க. அரசின் மேற்படி செயல் மூலம், அரசு வேலைவாய்ப்புகள் இனி உருவாக்கப்படமாட்டாது என்பதும், காலிப் பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்பப்படாது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் இனி கானல் நீர் என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், சமூக நீதிக்கு தி.மு.க. அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. ஒருவேளை சமூக நீதியை காவு கொடுப்பதுதான் 'திராவிட மாடல்' போலும். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு உண்மையிலேயே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற அக்கறை இருக்குமேயானால், மூன்று துறைகளுக்கு மூடுவிழா நடத்த பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து