முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம்: பயனரின் வேண்டுகோளுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதில்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      அரசியல்
Nirmala-Seetharaman 2023-04-27

Source: provided

 

புதுடெல்லி : நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற சமூக ஊடகமான எக்ஸ் பயனர் ஒருவரின் கோரிக்கைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

அமைச்சரின் சமூக வலைதள இடுகை ஒன்றுக்கு பதில் அளித்த அந்தப் பயனர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அப்பயனரின் இடுகையைப் பகிர்ந்துள்ள நிதியமைச்சர், “அவரின் கருத்துக்கள் மதிப்பு வாய்ந்தது என்றும் அரசு மக்களின் குரல்களை கேட்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

துஷார் சர்மா என்ற எக்ஸ் பயனர், "நாட்டுக்கான உங்களின் பங்களிப்பு மற்றும் முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். மேலும் நீங்கள் எங்களின் மேலான அபிமானத்தையும் பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்குவதையும் கொஞ்சம் பரிசீலிக்குமாறு உங்களை நான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். அதில் அடங்கியிருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது ஒரு இதயப்பூர்வமான வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார். 

சர்மாவின் இந்த இடுகையை டேக் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதில் அளித்துள்ளார். அமைச்சர் தனது பதிலில், “உங்களின் கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதலுக்கு நன்றி. நான் உங்களின் கவலையை உணர்கிறேன், உங்களைப் பாராட்டுகிறேன். பிரதமர் மோடியின் அரசு பதில் அளிக்கக்கூடிய அரசு. அது மக்களின் குரல்களுக்கு செவி சாய்க்கிறது. உங்களின் புரிதலுக்கு மீண்டும் ஒரு நன்றி. உங்களின் கருத்து மிகவும் மதிப்பு மிக்கது.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து