முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் : முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

மும்பை : இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

தீவிர பயிற்சியில்... 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டு 10 நாட்களுக்கு முன்பாகவே சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

செல்லவில்லை...

கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அணியினருடன் செல்லவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்கும்போது அருகில் இருந்து கவனிக்கும் பொருட்டு அவர் ஆஸ்திரேலியா செல்லவில்லை. தற்போது குழந்தை பிறந்து விட்டதால் ரோகித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் அவர் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு... 

இந்நிலையில் ரோகித் சர்மா எதிர்பார்த்த வேலை முடிந்து விட்டதால் நாட்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்கு அவருடைய கேப்டன்ஷிப் தேவைப்படுகிறது. அவருடைய மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்று நம்புகிறேன். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று உறுதியாக நம்புகிறேன். முடிந்தளவுக்கு அவர் வேகமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும்.

விளையாடுவேன்... 

ஒருவேளை நான் அவருடைய இடத்தில் இருந்தால் பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடுவேன். அந்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இந்த தொடருக்குப் பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடப் போவதில்லை. எனவே சிறந்த கேப்டனான ரோகித் சர்மா தலைமை தாங்குவது இந்தியாவுக்கு அவசியமாகிறது. ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட ரோகித் சர்மா விரும்பவில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய கெரியரை டெஸ்ட் கேப்டனாக அல்லாமல் முடிக்க கூடாது என்று அவரிடம் பிசிசிஐ தலைவராக இருந்தபோது நான் கூறினேன். எனவே அவருடைய தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்துள்ள விஷயங்களை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து