முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி: திருமண விழாவில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024      தமிழகம்
Mathu 2023 04 15

Source: provided

தென்காசி : தென்காசியில் திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றிரவு நண்பர்களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முனியா கணேசன், அரிவாளால் பட்டமுத்துவை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தாக்குதலை தடுக்க வந்த பட்டமுத்துவின் நண்பர் அருண்குமார் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முனியா கணேசன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து