எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 27-ம் தேதி தமிழகம் வருகிறார்.
இதற்காக அவர் அன்றைய தினம் காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம், கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 28-ம் தேதி (வியாழக்கிழமை) காலை ஜனாதிபதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலமாக குன்னூருக்கு செல்கிறார். ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறும் கல்லூரிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.
வரும் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ்பவனில் நீலகிரி வாழ் பழங்குடி மக்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஊட்டி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வருகிற 30-ம் தேதி (சனிக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சென்று, அங்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். பட்டமளிப்பு முடிந்ததும், மீண்டும் திருச்சி வந்து, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி பயணிக்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி. நிஷா, மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் போலீசார் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, பொதுப்பணித்துறை சார்பில் ராஜ்பவனில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது, நகராட்சி சார்பில் தூய்மை பணி மேற்கொள்வது, சாலை சீரமைப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. அங்கு ஹெலிகாப்டர் தளம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஹெலிகாப்டர் தளத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அங்குலம், அங்குலமாக சோதனையும் மேற்கொண்டனர்.
அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தை சுற்றியுள்ள பகுதியில் வெளியாட்கள் நுழையவும் போலீசார் தடைவிதித்தனர்.
ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.தீட்டுக்கல், படகு இல்லம், ஹல்பங்க், கலெக்டர் அலுவலகம், ராஜ்பவன் வரையிலான சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சாலையோர முட்புதர்கள் அகற்றப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி வருகையை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது.
அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் வருபவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் வாங்கி பார்த்து சோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை: * சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறு * அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
21 Nov 2024சென்னை, தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
வங்கதேச இடைக்கால அரசின் 100 நாட்களில் சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
21 Nov 2024டாக்கா, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2024.
21 Nov 2024 -
முறைகேடு புகார்: பிரபல தொழிலதிபர்: அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு
21 Nov 2024நியூயார்க், சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரபல தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு
-
வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தால் நடவடிக்கை: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
21 Nov 2024சென்னை, பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ள நிலையில், வீட்டில் வைத்து பிரசவம் ப
-
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
21 Nov 2024ஈரோடு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு
21 Nov 2024சென்னை, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.&nbs
-
16 வயதுக்குட்பட்டவர்கள் வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்
21 Nov 2024சிட்னி, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அதானி குழுமம் மறுப்பு
21 Nov 2024புது டெல்லி, அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள்
-
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரண தண்டனை
21 Nov 2024ரியாத், சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஒரே ஆண்டில் 101 பேருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை தொண்டர்கள் கடந்து செல்ல வேண்டும்: திருமாவளவன் அறிவுரை
21 Nov 2024சென்னை, காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என வி.சி.க. தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
-
பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து
21 Nov 2024மெல்போர்ன், பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
21 Nov 2024புது டெல்லி, தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
வி.சி.க. மீது நம்பிக்கை வரும் போது அதிகாரத்தை மக்கள் கொடுப்பார்கள்: பழனியில் திருமாவளவன் பேட்டி
21 Nov 2024பழனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள் என்று பழனியில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
-
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு ஆடுஜீவிதம் படத்திற்காக ஹாலிவுட் இசை மீடியா விருது
21 Nov 2024சென்னை, சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை ஆடுஜீவிதம் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் 11 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியல்: ஆம் ஆத்மி வெளியீடு
21 Nov 2024புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்
21 Nov 2024பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ந
-
ஜனாதிபதி திரவுபதி முர்மு 27-ம் தேதி நீலகிரி வருகை: கண்காணிப்புகள் தீவிரம்
21 Nov 2024ஊட்டி, திருவாரூர் மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி த
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று தி.மு.க. எம்பி. க்கள் கூட்டம் நடக்கிறது
21 Nov 2024சென்னை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, தி.மு.க.
-
திருமுடிவாக்கத்தில் தொழில்நுட்ப மையம்: திருவள்ளூரில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
21 Nov 2024சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.
-
ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
21 Nov 2024ராஞ்சி, ஜார்கண்டில் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஐதராபாத் வருகை
21 Nov 2024புது டெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வருகிறார்.
-
தமிழகத்தில் சாமானியர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்படவில்லை: அமைச்சர் கே.என்.நேரு
21 Nov 2024திருச்சி, தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
மனிதவள மேலாண்மை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி ஆய்வு
21 Nov 2024சென்னை, முதல்வர் மு.க.
-
அந்தமான் பகுதியில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 25-ம் தேதி 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
21 Nov 2024சென்னை, தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவ