எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலம் இன்று (நவம்பர் 24) மற்றும் நாளை (நவம்பர் 25) சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடங்கவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று தொடங்கவுள்ள நிலையில், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து, அவர் மிகவும் சிறப்பான பண்புகளைக் கொண்டவர். அவர் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளார். அதனால், எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன் என்றார்.
________________________________________________________________________________
திலக் வர்மா சாதனை
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு, பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் திலக் வர்மா தலைமையிலான ஐதராபாத் அணி, மேகாலயாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மேகாலயா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவி 4 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 151 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மேகாலயா 69 ரன்களில் ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இந்த சதம் திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அடித்த 3-வது சதமாகும். ஏற்கனவே கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் (4 போட்டிகள்) இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அவர் கடைசி 2 போட்டிகளில் சதம் அடித்திருந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் (உள்ளூர் & சர்வதேசம்) தொடர்ச்சியாக 3 சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
________________________________________________________________________________
ஸ்டார்க்கை சீண்டிய ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் அரை சதமடித்தனர் . இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்திருந்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கேஎல் ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் சீண்டினார். ஸ்டார்க் பந்துவீசிய பிறகு அவரை பார்த்து 'உங்களது பந்து மிக மெதுவாகவருகிறது' என ஜெய்ஸ்வால் நக்கலாக தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
________________________________________________________________________________
மீண்டும் கோபமடைந்த காம்பீர்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் முடிவில் ஆஸி. அணி 67/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது, உணவு இடைவேளை வரை விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 100க்கு அதிகமான பந்துகள் விளையாடினார். 67/7 என்றிருந்த ரன்னிலிருந்து 104க்கு கொண்டு சென்றார்.
பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது காமிராவில் காட்டப்பட்ட இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கோபமாக தனது தொப்பியை தூக்கி வீசினார். ஏற்கனவே, நியூசிலாந்திடம் வரலாற்று தோல்வியை சந்தித்தபோது திமிராக பேசியது சர்ச்சையானது. முன்னாள் வீரர்கள் பலரும் கம்பீரை அமைதியாக இருக்கும்படிக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிப் பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்தத் தொடரில் தோல்வியுற்றால் அவரது பயிற்சியாளர் பதவி பறிபோகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல்
26 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: டிரம்ப் அறிவிப்பு
26 Nov 2024வாஷிங்டன் : கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் போட்டியில் ஐவரிகோஸ்ட்டை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா சாதனை
26 Nov 2024லாகோஸ் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எதிரணியை 7 ரன்னில் சுருட்டி நைஜீரியா வரலாற்று சாதனை படைத்தது.
தகுதி சுற்றுகள்...
-
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடக்கம்: தமிழக விவசாயிகள் பங்கேற்பு
26 Nov 2024புதுடெல்லி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
-
தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து செயலாளர் உறுதி
26 Nov 2024சென்னை, டிசம்பர் 2-வது வாரத்துக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தொழிற்சங்கத்தினரிடம் போக்குவரத்து செயலாளர் உறுதியளித்தார்.
-
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதா? மத்திய அமைச்சகம் விளக்கம்
26 Nov 2024புதுடெல்லி, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை