முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை

சனிக்கிழமை, 23 நவம்பர் 2024      விளையாட்டு
Bumra 2023-09-08

Source: provided

பெர்த் : வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்கள் கைப்பற்றி, சுமார் 78 சதவீதம் வெளிநாட்டு மண்ணில் விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை ஜஸ்ப்ரிட் பும்ரா படைத்துள்ளார்.

இந்தியா ஆஸி.க்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று முன்தினம் (நவ.22) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட் ஆக, ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் 2ஆம் நாளை முடித்துள்ளது. இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 11 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை சமன்செய்துள்ளார்.

131 விக்கெட்டுகள்...

சொந்த மண்ணில் 2 முறையும் வெளிநாடுகளில் 9 முறையும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.  மொத்தமாக சொந்த மண்ணில் 12 போட்டிகளில் 43 விக்கெட்டுகளும் வெளிநாடுகளில் 131 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். பொதுவாக அனைவரும் சொந்த மண்ணில் சிறப்பாக பந்துவீசும்போது பும்ரா வெளிநாட்டில் அசத்தியுள்ளார். பும்ராவின் 73.58 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாட்டில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அதிகமுறை வெளிநாட்டில் 5 விக்கெட்டுகள் எடுத்தவர்களில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ (21) முதலிடத்தில் இருக்கிறார். மெக்ரத் (18), வாசிக் அக்ரம் (17) அடுத்தடுத்த வரிசையில் இருக்கிறார்கள்.

கபில்தேவ் 5 முறை...

இந்தியாவின் கபில்தேவ் வெளிநாட்டில் 12 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ஆனால், பும்ராவின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 73 சதவிகித விக்கெட்டுகள் வெளிநாடுகளில் என்பது வியக்கதக்க சாதனையாகவே இருக்கிறது. இந்தத் தொடரில் இன்னும் 4 போட்டிகள், ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள நிலையில் பல சாதனைகளை பும்ரா முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து