முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ராணுவத்திற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      உலகம்
America 2024-04-22

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2025-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பின்போது, 281 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 140 எம்.பி.க்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதன்படி இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் இருப்பை அதிகரிப்பது, ராணுவ ஊதியத்தை அதிகரிப்பது, ஏழு புதிய கப்பல்களை உருவாக்குவது மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் ராணுவ பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்ததாக செனட் சபையின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும்.

இது குறித்து சபாநாயகர் மைக் ஜான்சன் கூறுகையில்:- அமெரிக்காவையும், அதன் நலன்களையும் பாதுகாக்கும் முக்கிய ராணுவ பணிகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும். இது ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வில் சிறப்புமிக்க முதலீடுகளை செய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து