முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: லாரி பறிமுதல் - போலீசார் விசாரணை

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      தமிழகம்
Kerala waste-2024-12-20

Source: provided

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த கல்லூா், பழவூா் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அரசு அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். இந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வர உதவியதாக சேலத்தை சேர்ந்த லாரியை பறிமுதல் போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் லாரியை பறிமுதல் செய்ததாக தெரிவித்த காவல்துறையினர், லாரி உரிமையாளரிடம் நடத்திய விசாரணையை அடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து