முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: பாப்கார்ன் பயன்படுத்தப்பட்ட காருக்கு வரி விதிக்க பரிந்துரை

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      இந்தியா
Nermala 2024-12-21

Source: provided

ஜெய்ப்பூர் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தானில் நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மற்றும் பயன்படுத்தப்பட்ட காருக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாப்கார்ன் சுவைக்கு ஏற்ப 5 சதவீதம் முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5 சதவீதம் வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீதம் வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் பயன்படுத்தப்பட்ட சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்த கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதனிடையே நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீதான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்தது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, ஜனவரி மாதம் கூடி விவாதித்து ஒருமித்த கருத்தை எட்டிய பின்னரே இதில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சனிக்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, "கவுன்சிலின் சில உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் கூடுதல் விவாதம் தேவை என்று நினைக்கிறார்கள்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து