முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

புதன்கிழமை, 1 ஜனவரி 2025      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் பழனி கோவிலுக்கு வருகை தந்தனர்.

இதனால் பழனி படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். மலைக்கோவிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதையில் ராணி மங்கம்மாள் மண்டபம் அருகே உள்ள வழியில் இறங்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

பழனி மலைக்கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு அதனை பக்தர்கள் பாதுகாப்பு அறையில் வைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. தடையை மீறி மலைக்கோவிலில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை அய்யப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது.

மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதல் கடும் பனியையும் பொருப்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சொர்ணா அபிஷேகமும் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம்  காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காகவே அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து