முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்தம் அமல் எதிரொலி: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பிணைக்கைதிகள் விடுவிப்பு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2025      உலகம்
Israel---Hamas-2025-01-20

டெல் அவிவ், இஸ்ரேல், ஹமாஸ் படைகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகளை நேற்று முதல் விடுவித்து வருகின்றனர். முதல்கட்டமாக இஸ்ரேல் 90 பிணைக் கைதிகளையும், ஹமாஸ் 3 பிணைக் கைதிகளையும் விடுவித்தது.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர், கடந்தாண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ஓராண்டுக்கும் மேலான போரை நிறுத்த, கடந்த வாரம் அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பிணைக் கைதிகள் குறித்த விவரங்களை வெளியிடாவிட்டால், போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.

இதற்கிடையே, பிணைக் கைதிகளின் விவரங்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் வழங்கியது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, ஹமாஸ் தரப்பினர் 33 பிணைக் கைதிகளையும், இஸ்ரேல் தரப்பினர் 737 பாலஸ்தீனர்களையும் விடுவிக்கவுள்ளனர். இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் ராஜிநாமா செய்தனர்.

இந்த நிலையில், முதல்கட்டமாக இஸ்ரேல் படையினர் 90 பாலஸ்தீனர்களையும், ஹமாஸ் படையினர் 3 இஸ்ரேல் நாட்டினரையும் நேற்று விடுவித்துள்ளனர். செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இருநாட்டு படையினரும் பிணைக் கைதிகளை விடுவித்து அனுப்பிவைத்தனர். இரு நாட்டு மக்களும் பிணைக் கைதிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து