முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மழலையர் முதல் முதுகலை வரை மாணவர்களுக்கு இலவசக்கல்வி: பா.ஜ.க 2-வது தேர்தல் வாக்குறுதி

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் முதல் முதுகலை வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பா.ஜ.க மூத்த தலைவர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், அரசு கல்வி நிறுவனங்களில் மழலையர் முதல் முதுகலை வரை தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பா.ஜ.க மூத்த தலைவர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு ரூ.15,000 உதவித் தொகை முதல் இரண்டு முயற்சிகள் வரை வழங்கப்படும். பீம்ராவ் அம்பேத்கர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடும், ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடும் வழங்கப்படும், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் நல வாரியம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து