முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் மீண்டும் எச்.எம்.பி.வி தொற்று

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      இந்தியா
china 2025-01-04

Source: provided

கவுகாத்தி : அஸ்ஸாமின் கவுகாத்தியில் 75 வயது பெண்ணுக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவில் இருந்து குழந்தைகளைத் தாக்கக்கூடிய எச்.எம்.பி.வி. தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுதொடர்பாக அசாம் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னதாக லக்கிம்பூரைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டு அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.

இந்த நிலையில், 75 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகள் உட்படுத்தும்போது அவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது.

அஸ்ஸாமில் பதிவான இரண்டாவது எச்.எம்.பி.வி. தொற்று இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது கண்டறியப்படுகிறது, புதிதாக எதுவும் இல்லை. மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது அனைத்து வயதினருக்கும், குறிப்பாகக் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சுவாச வைரஸ்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் தொற்றானது பெரும்பாலும் 4 முதல் 5 நாள்களுக்குள் குணமாகிவிடும். சிலருக்கு தாங்களாகவே குணமடைகின்றனர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து