முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்புடன் விருந்து: ஒரேயொரு இரவு விருந்தில் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      உலகம்
Trump 2024-02-17

Source: provided

வாஷிங்டன் : டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட, பேச   பெருந்தொகையை அளிக்க   உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டினர். இதன்படி, ரூ.2 ஆயிரம் வரை பணம் திரண்டுள்ளது.  

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சியில்,  முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். 

இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.   

விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு டிரம்ப் இரவு விருந்து அளித்து கவுரவித்துள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் சென்றிருந்தனர். இந்தியாவில் இருந்து தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி சென்றிருந்தனர்.

டிரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது. இதன்படி, 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் டாலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டாலர்கள் வரை அவற்றின் விலை இருக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். இதில், 1 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.9 கோடி ஆகும்.  

இதன்படி, ரூ.1,700 கோடி வரை பணம் திரண்டுள்ளது. இந்த தொகையானது ரூ.2 ஆயிரம் கோடியை அடையும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், ஒரு புதிய சாதனை படைக்கப்படும். டிரம்புடன் இரவு விருந்து சாப்பிடவும், அவருடன் பேசவும் பெருந்தொகையை அளிக்க வேண்டும் என்றபோதும், உலகின் மிக பெரிய தொழிலதிபர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். நன்கொடையும் அளித்துள்ளனர். எனினும், இந்த தொகையை பயன்படுத்துவது பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஜனாதிபதி நூலகத்திற்கு நிதியுதவி செய்ய இந்த தொகையை டிரம்ப் பயன்படுத்த கூடும் என யூகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் இரவு விருந்தில் இவ்வளவு பெரிய தொகையை டிரம்ப் அள்ளியிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து