முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் பொற்காலம் தொடக்கம்: அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல் உரை

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      உலகம்
Trump 2023-04-13

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கியுள்ளது என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப்  கூறினார்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். 2-வது முறையாக டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளார். கடுமையான குளிர் தாக்கத்தினால், கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற உள்ளரங்கத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.   இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

இதன்பின்னர் டிரம்ப் உரையாற்றினார். அவர் பேசும்போது, அமெரிக்காவின் பொற்காலம் தற்போது முதல் தொடங்கியுள்ளது. இதுவரையில்லாத வகையில், ஒரு வலிமையான அமெரிக்காவை நான் கட்டமைப்பேன். இந்த நாளில் இருந்து அமெரிக்கா செழித்து, வளரும். உலக நாடுகள் முழுவதும் மதிக்கப்படும். அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும் என்றார்.

மேலும், இயற்கை பேரிடர்களை தடுப்பதில் பைடன் அரசு தோல்வியடைந்து விட்டது. எல்லை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை பைடனால் தீர்க்க முடியவில்லை என்றார். அமெரிக்காவில் பல உயிர்களை பலி வாங்கிய துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டுவேன்.

அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம். அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம். செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்.

பனாமா கால்வாயை மீட்டெடுப்போம். அதை சீனா நிர்வகிக்க தரவில்லை பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அமெரிக்கா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம். வளங்களை அதிகரிக்கக் கூடிய நாடாக அமெரிக்காவை மாற்றுவோம்.  இவ்வாறு டிரம்ப் தனது உரையின் போது குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து