முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ல் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு : அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      உலகம்
Trump 2024 08 17

Source: provided

வாஷிங்டன் : 2021ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவத்தில் வழக்கை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது. இதில், ஜோ பைடன் வெற்றிபெற்றார். தேர்தலில் அப்போது ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்தார். அதேவேளை, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதரவாளர்கள் தனக்கு உறுதுணையாக இருக்கும்படி டிரம்ப் கூறினார்.

இதையடுத்து, 2021 ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற அலுவலகங்கள், அறைகளை சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக 1,500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சிலர் சிறைகளில் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார். பதவியேற்ற உடன் 2021ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,500 க்கும் மேற்பட்டோருக்கும் டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்தார். இதையடுத்து, சிறைகளில் உள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து