முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை சுட்டு பிடித்த போலீசார்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து பிடிக்கவும் 2 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார். மேலும் சி.சி.டிவி. காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்த சென்று ஹரி என்ற நபர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை ஹரி கத்தியால் குத்த முயன்றதால், தற்காப்புகாக கால் முட்டிக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இரண்டு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து