முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் பொது சிவில் சட்டம்: 5 பேர் கொண்ட குழு அமைப்பு

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Bhupendra-Patel 2025-02-04

Source: provided

குஜராத் : பொது சிவில் சட்டத்துக்கான வரைவை தயாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். 

நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத்திலும் அந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை நேற்று சந்தித்த பூபேந்திர படேல் பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில், அரசியலமைப்பின் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே அவரது குறிக்கோள். பிரிவு 370 ரத்து, ஒரு நாடு ஒரு தேர்தல் மற்றும் முத்தலாக் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. அதே திசையில், மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற குஜராத் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது

பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தனது அறிக்கையை 45 நாள்களில் மாநில அரசுக்கு சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிஎல் மீனா, வழக்கறிஞர் ஆர்சி கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர் மற்றும் சமூக ஆர்வலர் கீதா ஷ்ராப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து