முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு காலி பணியிடங்கள் எத்தனை? - டி.என்.​பி.எஸ்.சி தலைவர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      தமிழகம்
TNPSC 2024 08 13

Source: provided

சென்னை : இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

அரசு பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டி.என்.​பி.எஸ்.சி.  வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆண்டு​தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.

வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்வுகள், எத்தனை காலியிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்களும் விரிவாக குறிப்பிடப்​பட்டிருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்டவணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெறவில்லை. இதனால், எத்தனை காலி​யிடங்கள் அறிவிக்​கப்​படும். எந்தெந்த பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்​படும் என்பது தேர்வர்களுக்கு தெரிய​வில்லை.

இதுகுறித்து டி.என்.​பி.எஸ்.சி.  தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்ட​போது, “தற்​போதைய நிலை​யில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்​கப்​பட்ட அனைத்து காலியிடங்களுக்குமான போட்டித்​தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு​விட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலியிடங்களின் விவரம் மார்ச் மாதத்​துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்​தான் தெரிய​வரும். தேர்​வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடும்​போது அதில் காலியிடங்கள் எண்ணிக்கை​யும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்​பெறும்.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்​நுட்​பணிகளுக்கான தேர்​வு​களின் (நேர்​காணல் இல்லாதது) ​முடிவு​கள் பிப்​ரவரி ​மாதம் வெளி​யிடப்​படும் என அறி​வித்​திருந்​தோம். அதன்​படி, அத்​தேர்​வுகளின் ​முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்​” என்​றார்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து