முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      விளையாட்டு
INDIA 2024-10-23

Source: provided

 மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.

14 விக்கெட்டுகள்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

வருண் சக்ரவர்த்திக்கு இடம்...

இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வருகிற 6 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளதை துணைக் கேப்டன் சுப்மன் கில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்திய அணியின் வலைப் பயிற்சியில் வருண் ஈடுபட்டார்.

சாம்பியன்ஸ் டிராபியில் வருண்?... 

வருகிற 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவிருக்கும் வேளையில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியுடன் இணைந்திருப்பது அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வருவது மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் ஆகியவை இந்திய அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், வருண் சக்ரவர்த்தி இடம் பிடிப்பது குறித்து அணித் தேர்வர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் மாற்றம் செய்ய 12 ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து