முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      தமிழகம்
eps

Source: provided

சென்னை : அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது. யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை. யார் அந்த சார்கள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அஇஅதிமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு.

இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. எனவே தான், மகள்களைக் காப்பாற்றுங்கள் என்று பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்.

இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன். இதுவரை நாம் நடத்தி வந்த #SayNoToDrugs_SayNoToDMK என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து