முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒருநாள் போட்டி: சாதனை படைத்த கோலி, கில்

புதன்கிழமை, 12 பெப்ரவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

காந்தி நகர் : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கோலி, கில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

சுப்மன் - கோலி...

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.

கோலி அரை சதம்...

17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும் போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.

4 ஆயிரம் ரன்கள்... 

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது. நேற்றைய போட்டியில் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் மூன்று அணிகளுக்கு எதிராக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5393 ரன்களும், இலங்கைக்கு எதிராக 4076 ரன்களும் அடித்துள்ளார்.

2,500 ரன்களை... 

சுப்மன் கில் 25 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2500 ரன்களை தொட்டார். இது அவருடைய 50-வது ஒருநாள் போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 2500 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து