முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      இந்தியா
Kashmir--2025-02-13

ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அவரது தாய் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கியதால் கண்கலங்கிய உறவினர்கள். 

காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் மகனை பறிகொடுத்த தாய், உடல் அடக்கத்தின்போது, 'கடவுள் சத்தியமானவர்' என்று உரக்க முழங்கியது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. ஜம்மு காஷ்மீர் அக்னுாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ராணுவத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் கேப்டன் கரம்ஜித் பக்சியும் ஒருவர். அவரது உடல் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. மாநில கவர்னர் சந்தோஷ் குமார் கங்குவார் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அப்போது, கேப்டன் கரம்ஜித் பக்சியின் தாயார், கண்களில் நீர் வழிய சீக்கிய சம்பிரதாயப்படி, கடவுள் சத்தியமானவர் என்று முழங்கினார்.அங்கிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கண்களில் நீர் வழிய திரும்பக் கூறினர். இதைக்கண்டு, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனைவரும் கண்ணீர் மல்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து