முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொழுதுபோக்கு வரியை குறைக்க வேண்டும்: துணை முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Kamal 2023-09-19

Source: provided

சென்னை : பொழுதுபோக்கு வரியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்த தலைப்பிலும் விவாதங்கள் நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராக சினிமா இருக்கும். இந்திய சினிமாவுக்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக்கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில்நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும். சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு ஐ.டி.ஐ.களை உருவாக்க வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொழுதுபோக்கு வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன். தற்போது புதிய வருவாய் ஈட்டக் கூடியதாக ஓ.டி.டி. தளம் இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 'பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது. விழாவில் பேசும்போது கமல்ஹாசன் பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். உங்களுடைய கோரிக்கையை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று, சட்ட ரீதியாக ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பார். அதற்கு நான் உங்களுக்கு துணை நிற்பேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து