முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திராகாந்தி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் காங் எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      இந்தியா
Cong 2024 08 10

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்றாவது நளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தானில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் கேள்வி நேரத்தின் போது சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசினார். அப்போது, ‘கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரையே அனைத்து திட்டங்களுக்கும் சூட்டினீர்கள்’ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவைக்கு உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சட்டப்பேரவை திங்கள் கிழமை கூடியதும் இந்திரா காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெற வேண்டும், எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினமும் (திங்கள் கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை அடுத்தடுத்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவைக்கு வெளியேயும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்றும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடி கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து