முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவிக்கு புதிதாக செல்போன் கொடுத்த அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      தமிழகம்
MRK-3 2023 03 21

Source: provided

கடலூர் : முதல்வரிடம் செல்போன் இல்லை என்று தெரிவித்த கல்லூரி மாணவிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய செல்போன் வாங்கி தந்ததை அடுத்து அம்மாணவி நெகிழ்ச்சி அடைந்தார்.

கடலூர் மாவட்டத்துக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் களஆய்வுக்கு, கடந்த 21, 22 ஆகிய தேதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் முதல்வர் வரவேற்பு அளித்தனர். கடந்த 21-ம் தேதி இரவு நெய்வேலி தங்கிய முதல்வர். மறுநாள் 22ஆம் தேதி காலை புறப்பட்டு வேப்பூர் சென்றார். அப்பொழுது நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் பொதுமக்கள் பெண்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில், பி எஸ் சி இயற்பியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ச.ஜனனி என்ற மாணவி முதல்வரை பற்றி தான் எழுதிய கவிதை அப்பா முத்துவேல் கருணாநிதி என்ற தலைப்பில் எழுதிய கவிதையை காண்பித்து ஆசிப்பெற்றார்.

அப்பொழுது முதல்வர் அந்த மாணவியிடம் இந்த கவிதையில் உனது செல்போன் நம்பரை எழுது என்று கூறியுள்ளார். அதற்கு மாணவி ஜனனி அவருடைய தந்தையார் செல்போன் என்னையும் அவருடைய அக்காவின் செல்போன் என்னையும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் முதல்வர் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள் நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்டுள்ளார் அதற்கு ஜனனி என்னிடம் செல்போன் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் முதல்வர் வேப்பூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து 22-ம் தேதி இரவு சுமார் 9:30 மணி அளவில் முதலமைச்சர் ஜனனியின் தந்தை சஞ்சீவ் காந்தியின் செல்போனுக்கு சென்று ஜனனியுடன் பேசினார். அந்த போன் சரியாக இல்லாததால் விட்டுவிட்டு பேசியதால், முதல்வர் போனை கட் செய்து விட்டு ஜனனி அக்காள் செல்போன் நம்பரில் இருந்து தொடர்புகொண்டு கல்லூரி மாணவி ஜனனியுடன் பேசி உள்ளார்.

அப்பொழுது அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு ஜனனி, கல்லூரி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும், நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எனது தந்தையார் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார் என்று கூறியுள்ளார். முதல்வர் அம்மாணவி கல்வி கற்று முடிப்பதற்கு தான் உதவுவதாகவும், கல்வி பயில ஏதுவாக கைப்பேசி அளிப்பதாகவும் உறுதியளித்தார். இந்நிலையில் முதல்வரின் அறிவுறுத்தல்படி நேற்றுமுன்தினம் மதியம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை அலுவலகத்தில் மாணவி ச.ஜனனி மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்து மாணவி ஜனனிக்கு புதிய செல்போன் வாங்கிக் கொடுத்து வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து