முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா சுரங்க விபத்து: சிக்கியவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      இந்தியா
Telangana-Tunnel-Collapse

Source: provided

நாகர்னூல் : தெலங்கானாவின் ஸ்ரீசைலம் சுரங்க விபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி 72 மணிநேரமாக நீண்டுவரும் நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்களை தொடர்பு கொள்வதில் இன்னும் சிரமம் நீடிக்கிறது. சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன.

தெலங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாயில் உள்ள சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளின்படி, எஸ்எல்பிசி சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் நாகர்னூல் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கூறுகையில், “சுரங்கத்துக்குள்ளே சிக்கியிருப்பவகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம்.  தண்ணீரை வெளியேற்றி மீட்புக்குழுவினர் முன்னேறியுள்ளனர். ஆனால் கடைசி 40 மற்றும் 50 மீட்டர் வரை எங்களால் செல்லமுடியவில்லை. தற்போது ஜிஎஸ்ஐ, என்சிஆர்ஐ நிபுணர்களின் ஆலேசானையைப் பெற்று வருகின்றோம். எல்அண்ட்டி நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு தொழிலாலர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெலங்கானா புறப்பட்டுள்ளதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் என போலீஸ் அதிகாரிகளுடன் தெலங்கானா கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜார்க்கண்ட்டின் சில்கியாரா சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட எலி வலை சுரங்கத் தொழிலாளர்கள் இந்த மீட்பு பணியிலும் நேற்று இணைந்துள்ளனர். உள்ளே இருக்கும் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்பு செயல்திட்டம் வகுக்கப்படும்.” என்று எலிவலை தொழிலாளர்களில் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே உள்ளே சிக்கியிருப்பவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் மனோஜ் குமார் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சன்னி சிங், குர்தீப் சிங் , சந்தீப் சாஹு ஜெகதா ஜெக்ஸ், சந்தோஷ் சாஹு, அனுஜ் சாஹு ஆகிய நான்கு பேரும் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள். இந்த எட்டு பேரில் இரண்டு பேர் பொறியாளர்கள். இரண்டு பேர் ஆப்பரேட்டர்கள், 4 பேர் தொழிலாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து