முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      தமிழகம்
Teachers 2023 04 04

Source: provided

சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3700 உடற்கல்வி, 3700 ஓவியம், 2 ஆயிரம் கணினிஅறிவியல், 1700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்க்கைகல்வி என மொத்தம் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

தற்போது 12,500 ரூபாய் என்ற குறைந்த தொகுப்பூ ஊதியம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டாக மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி போன்றவைகூட இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள், விதவை, பெண்கள், ஏழை தினக்கூலி குடும்பங்கள் என சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வேலையில் உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்துவிட்டனர்.

 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட, காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி, தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து