முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டு பயணி

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      இந்தியா
Jail

Source: provided

 பெங்களூரு : பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் காவலரை தாக்கிய வெளிநாட்டு பயணி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வியாழக்கிழமை இரவு  எலியட் பிளேர் என்ற வெளிநாட்டுப் பயணி வந்துள்ளார். அவரிடம் ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாட்டின் கடவுச் சீட்டுகள் இருந்துள்ளன. அவரின் பேக்கை அப்பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை காவலர் ராம்குமார் தலேரா சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது, கோபமடைந்த பிளேர், காவலர் ராம்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரை மற்ற காவலர்கள் சமாதானப்படுத்த முயற்சித்த நிலையில், அவர்களையும் திட்டியுள்ளார். மேலும், வரிசையில் நின்றுகொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள், காவலர்களை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய காவல் நிலையத்துக்கு பிளேரை அழைத்துச் சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், அவர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவருக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து