எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கும் குடும்பத்தார் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களது முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக்குழந்தைகள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர். அங்கு வந்திருந்த மூத்த அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் வண்ண வண்ண பூக்கள் அலங்காரத்துடன் மக்கள் முதலமைச்சரின் மனித நேய நாள் என்று வாசகம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து கோபாலபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அங்கிருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்று கருணாநிதி படத்திற்கு மலர் தூவி வணங்கினார். அங்கு ராஜாத்தி அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கனிமொழி உடன் இருந்தார். அதன் பிறகு 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர். அதன் பிறகு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் பிரமாண்ட 'கேக்' கொண்டு வரப்பட்டது. அப்போது தலைமை கழக முன்னணி நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டினார்.
அதை பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வழங்கினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர். அதன் பிறகு கலைஞர் அரங்கம் சென்றார். அங்கு கூடி இருந்த தொண்டர்கள் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் விண்ணதிர பிறந்தநாள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு வந்திருந்த அமைச்சர்கள், தொண்டர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசித்தார். அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் ஒவ்வொருவரும் நீண்ட வரிசையில் நின்று பரிசுப் பொருட்கள் வழங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மாலைகள், புத்தகங்கள், வீரவாள்கள், பழங்கள், பூக்கூடைகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03 -03-20235
02 Mar 2025 -
3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு
02 Mar 2025கெய்ரோ : எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
-
பயோ டெக்னாலாஜி நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
02 Mar 2025சென்னை : முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது.
-
அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
02 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின
02 Mar 2025சென்னை : இசைஞானி இளையராஜா மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வ
-
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து : தன்னம்பிக்கையுடன் எழுதுமாறு அறிவுறுத்தல்
02 Mar 2025சென்னை : 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக்கொலை : சக மாணவர் வெறிச்செயல்
02 Mar 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் : மத்திய அரசு புதிய அறிவிப்பு
02 Mar 2025புதுடெல்லி : புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
சீமான் வழக்கில் தி.மு.க.வின் தலையீடா? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Mar 2025புதுக்கோட்டை : சீமான் விவகாரத்தில் தி.மு.க. பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு
02 Mar 2025சென்னை : தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது : தயார்நிலையில் தேர்வு மையங்கள்
02 Mar 2025சென்னை : தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
நன்றியுணர்வு மற்றும் பக்தியின் அடையாளம் ரம்ஜான் நோன்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
02 Mar 2025புதுடெல்லி : ரம்ஜான் நோன்பு நேற்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகள்: பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை
02 Mar 2025சென்னை : த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகளைத் திணிக்கும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல்
02 Mar 2025ராமேசுவரம் : மீனவர் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரி
-
தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்
02 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொத
-
மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் பேர் பயன் தமிழக அரசு தகவல்
02 Mar 2025சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
-
உணவக மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
02 Mar 2025சென்னை : இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா
02 Mar 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
-
இனி நிம்மதியாக இருக்க முடியாது: சீமான் மீது நடிகை சாபம்
02 Mar 2025சென்னை: சீமான் இனி நிம்மதியாக இருக்கமுடியாது என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார்.
-
10, 11, 12 பொதுத்தேர்வு: உதவி எண்கள் அறிவிப்பு
02 Mar 2025சென்னை : 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது தனியார் விண்கலம் 'புளூ கோஸ்ட்'
02 Mar 2025வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்தின் விண்கலம், நிலவில் நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.மா.கா.பங்கேற்காது: ஜி.கே.வாசன் அறிவிப்பு
02 Mar 2025சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் த.மா.கா.
-
வரும் 6-ம் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Mar 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்ன
-
ஆக்ராவில் விப்த்து: 5 பேர் பலி
02 Mar 2025ஆக்ரா: ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
-
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மருமகனை நீக்கினார் மாயாவதி
02 Mar 2025புதுடில்லி: பகுஜன் சமாஜில் அதிரடி மாற்றமாக, பகுஜன் சமாஜின் தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி,கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை நீக்கி