முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் தொடரும் மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைக்கப்பட்டதால் அதிர்ச்சி

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      இந்தியா
Otisha 2025-03-04

Source: provided

ஒடிசா : ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு மாதமேயான பச்சிளம் குழந்தைக்குக் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் குழந்தையின் உடலுக்குள் தீய சக்தி புகுந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பினர். குழந்தையை சிகிச்சைக்குக் கொண்டு செல்லாமல், தீய சக்தியை விரட்டும் நோக்கத்தில் பச்சிளம் குழந்தையின் தலை, வயிற்றுப் பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.

வலி தாளமுடியாமல் குழந்தை தொடர்ந்து அழுததால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தை ஆபத்தான நிலையில் உமர்கோட் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சூடுவைத்த அடையாளங்களைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து