முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவை துணைத்தலைவர் பதவி

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

டெல்லி : 18-வது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.  17-வது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாமலே நிறைவடைந்த நிலையில், 6 ஆண்டுகளாக அப்பதவி காலியாக உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் மக்களவை துணைத் தலைவர் பதவி கோரியதை பா.ஜ.க. ஏற்காததால், மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தன.

இதன்விளைவாக, முதல்முறையாக மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த எம்.பி. கே.சுரேஷ் போட்டியிட்டார். முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க. உறுப்பினர் ஓம்.பிர்லா, இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானார். 

தற்போது, 18-வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 240 இடங்களிலும் காங்கிரஸ் 99 இடங்களிலும் அதிகபட்சமாக வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணிக்கு 232 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், மரபுப்படி மக்களவைத் துணைத் தலைவர் பதவி காங்கிரஸுக்கு அளிக்க வேண்டும் என்பதால் 9 மாதங்கள் ஆகியும் அப்பதவியை நிரப்பாமல் பா.ஜ.க. தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மக்களவை தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவி காலியாகும்போது, உடனடியாக அவையின் மற்ற உறுப்பினர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவைத் துணைத் தலைவர் பதவி காலியாக இருக்கும் நிலையில், அவையில் தலைவர் இல்லாதபோது வழிநடத்துவதற்கான குழுவை ஓம் பிர்லா நியமித்துள்ளார். அந்த குழுவில், பாஜகவின் ஜகதம்பிகா பால், பி.சி. மோகன் , சந்தியா ரே, திலீப் சைகியா, காங்கிரஸின் குமாரி செல்ஜா, தி.மு.க.வின் ஆ. ராசா, திரிணமூல் காங்கிரஸின் ககோலி கோஷ் தஸ்திதர், தெலுங்கு தேசம் கட்சியின் கிருஷ்ண பிரசாத் தென்னதி மற்றும் சமாஜவாதியின் அவதேஷ் பிரசாத் ஆகியோர் உள்ளனர். அவைத் தலைவர் ஓம் பிர்லா இல்லாதபோது, இவர்களில் ஒருவர் தலைமையேற்று நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து