முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் வரிவிதிக்கும் அமெரிக்கா: சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      உலகம்
USA 2025-03-04

Source: provided

வாஷிங்டன் : சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நாடுகள் பதிலடி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது வட அமெரிக்கா முழுவதும் கடுமையான வர்த்தகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவினைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது அநீதியானது என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த வரித் திட்டத்தை அறிவித்தபோது அதற்கு எதிராக ட்ரூடோ தெரிவித்திருந்த அமெரிக்கப் பொருட்களுக்கான எதிர்வரி அறிவிப்பை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டார். அதுகுறித்து ட்ரூடோ, முதல் கட்டமாக, கனடாவுக்குள் இறக்குமதியாகும் சுமார் 30 பில்லியன் (20.6 பில்லியன் அமெரிக்க டாலர்) கனேடியே டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். அமெரிக்கா தனது முடிவினைத் திருப்பப் பெறாதபட்சத்தில் இந்த உத்தரவு நியூயார்க் நேரப்படி நள்ளிரவு 12.01 முதல் அமலுக்கு வரும். இரண்டாவது கட்டமாக, அடுத்த மூன்று வாரங்களில் சுமார் 125 கனேடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு 25 சதவீதம் வரிகள் விதிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக, முக்கிய துறைகளான, வானங்கள், எஃகு, அலுமினியம் போன்றவைகளுக்கு வரி விதிக்கப்படும். அமெரிக்கா கூடுதல் வரி தொடர்பான தனது முடிவினை திரும்பப் பெறும் வரையில் எங்களுடைய வரிகளும் தொடரும் என்று தெரிவித்தார்.

இதனிடையே மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், மாற்றுத்திட்டங்கள் தயாராக உள்ளன. எங்களிடம் பிளான் பி, சி, டி கைவசம் உள்ளன. அமெரிக்காவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க மெக்சிகோ தயாராக உள்ளது. என்றார். ட்ரம்ப்பின் இந்த வரி அறிவிப்பு பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை வர்த்தகத்தின் போது, எஸ் அண்டி பி 500 குறியீடு 2 சதவீதம் குறைந்தது. ட்ரம்பின் இந்த முடிவு பண வீக்கத்தை அதிகப்படுத்தும், விநியோக சங்கிலியை பாதிக்கும், வட அமெரிக்காவில் வர்த்தக பதற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து