முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டி விற்பனை

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      தமிழகம்
Gold 2024-12-09

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று (மார்ச் 4) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.31-ம் தேதி ஒரு பவுன் ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது.

அதிலும், பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இதற்கிடையில் பிப்.26 தொடங்கி மூன்று நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 வரை குறைந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 4) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமின் விலை ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.560 உயர்ந்து, பவுன் ரூ.64,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.8,738 என விற்பனையானது. இதனிடையே, 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.107 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000 ஆகவும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து