முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர் சிறு விளையாட்டரங்கம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      தமிழகம்
T-CM 2025-03-04

Source: provided

சென்னை : சென்னை,மதுரை உள்பட 4 இடங்களில் முதல்வர்  சிறு விளையாட்டரங்கத்தை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில்  முதல்வர்  சிறு விளையாட்டரங்கம் 4.068 ஏக்கர் பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டு உள்ள முதல்வர்  சிறு விளையாட்டு அரங்கமும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது . 

இவற்றை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து  வைத்து கிரிக்கெட் டர்ப்பில் கிரிக்கெட் விளையாடினார். உடன் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்வர்  உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி சென்னைசேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர்  சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 கோடி ரூபாயில் கட்டுப்பட்டுள்ளது. எனது  தொகுதி நிதியில் இருந்து 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசு சார்பாக விளையாட்டுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது.

அதே போல மதுரை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 50 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்கள். மீதம் உள்ள தொகையை அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.  அந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து