முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி குறித்து கங்குலி

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள்) ஆழமான திறமை கொண்டிருப்பதால் இந்திய அணி எந்த எதிரணியையும் வீழ்த்தி கோப்பையை வெல்லுமென இந்திய முன்னாள் வீரர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியா 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது. மேலும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எதிரணி யாராக இருந்தாலும் இந்தியா மிகவும் வலுவானது. யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது" என்று கூறினார். 

___________________________________________________________________

முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்மகர் ஷிவல்கர் (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம்மரணமடைந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் 124 முதல் தர போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

இவரது சிறந்த செயல்பாடுகளில் ஒன்று 1972-73 ரஞ்சி சீசனின் இறுதிப்போட்டியில் 13 விக்கெட்டுகள் (2 இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி மும்பை கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடா விட்டாலும், உள்நாட்டு போட்டிகளில் இவரது பங்களிப்பை போற்றும் விதமாக இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ., சி.கே.நாயுடு வாழ்நாள் விருது வழங்கி கவுரவித்தது.

___________________________________________________________________

எம்மா நவாரோ சாம்பியன்

மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய எம்மா நவாரோ 6-0, 6-0 என எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து