முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல் மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 294 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியாநந்த் ராய் பஞ்சப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லையில் கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 294 டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், எல்லையைக் கடந்து டிரோன் மூலம் மேற்கொள்ளப்படும் கடத்தல்களை தடுப்பதற்காக பஞ்சாப் எல்லையில் டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அலுவகம், இந்திய விமானப் படை மற்றும் அப்பகுதியின் காவல் துறை ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதனைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்திய எல்லைக்குள் வரும் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்களின் வழித்தடத்தை கண்டறியவும் கடத்தல்காரர்களை பிடிக்கவும் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவை இரவு பகலாக முழு வீச்சில் செயல்பட்டுவருவதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து