முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Gujarat 2024-10-14

Source: provided

குஜராத்: குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கரவாதத் தடுப்புப் படை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், குஜராத் போலீஸார் இணைந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவரது வீட்டில் 88 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 80 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதனை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவ் அதிகளவு கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டதைத் தொடர்ந்த குஜராத் ஏடிஎஸ், டிஆர்ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இந்த பெரிய பறிமுதல் நடைபெற்றுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் கடத்தல் தங்கம் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி-க்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. திங்களன்று காலை நாங்கள் அந்த குடியிருப்பை அடையாளம் கண்டு, உள்ளூர் டி.ஆர்.ஐ. பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் சோதனை நடத்தினோம், என்று குஜராத் ஏடிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தங்கக் கட்டுகள் மட்டுமின்றி, வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் பொருத்தப்பட்ட 19.66 கிலோ எடையுள்ள நகைகளையும் அதிகாரிகள் மீட்டதாக நேற்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கூடுதலாக, ரூ.1.37 கோடி ரொக்கமும் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து