தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க நடவடிக்கை: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
Metro 2024-01--02

சென்னை, “இரண்டாம் நிலை நகரங்களில்  துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: “இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை தயாரிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

இந்த ஆய்வு அறிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அரசுக்கு சமர்ப்பித்து உள்ள நிலையில், நெல்லை நகரத்தை பொருத்தவரை துரிதப் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்திட உகந்ததல்ல என விரிவான சாத்தியக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தைப் பொறுத்தவரை விரிவான சாத்திய குழு அறிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ஏற்படும் அதிக நிதி சுமையை கருத்தில் கொண்டு, திருச்சி நகருக்கான துரிதப் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பின்னர் தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது, என்று திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து