Idhayam Matrimony

2027-ல் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சர்வதேச நிதி நாணயம் தகவல்

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      இந்தியா
INDIA 2024-04-17

Source: provided

புதுடெல்லி: 2027ம் ஆண்டு உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்று சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.

உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த 10 ஆண்டு கால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015-ம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது. தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024 25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன. 2027ம் ஆண்டு ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் 3வது பெரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா 30.3 டிரில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், சீனா 19.5 டிரில்லியன் டாலர்களுடனும் உள்ளன. தற்போதைய வேகத்தில் ஒவ்வோர் ஒன்றரை வருடங்களுக்கும் இந்தியா, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் டாலர்களை சேர்க்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வேகம் தொடர்ந்தால், 2032 ஆம் ஆண்டின் இறுதிக்குள், நாடு 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து