முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன: த.வெ.க. கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை : காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம்.அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். உங்கள் அரசியல் சம்பாதிக்கும் அரசியல். நாங்கள் ஊழல் செய்து லண்டன் சென்று ஊழல் பணத்தை செலவு செய்யவில்லை.

எம்.ஜி.ஆரை இழிவு செய்ததால்தான் அவரது ஆட்சியில் நீங்கள் வொர்க் பிரம் ஹோமில் இருந்தீர்கள். தி.மு.க.வின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஓய்வுக்கு தயராக வேண்டும். பிரசாத் கிஷோர் வருகை தொடர்பாக தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது. தி.மு.க.விற்காக வேலை பார்க்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும். தேர்தல் வியூக நிறுவனங்கள் மூலம் தி.மு.க. எதிர்க்கட்சிகளை உடைப்பது குறித்து பல்வேறு வியூகங்களை வகுக்கிறார்கள். தவெகவில் சாதி இல்லை. ஆனால், தி.மு.க.வில் சாதி உள்ளது. அரசியலில் சாதி என்பதை உருவாக்கியதே தி.மு.க.தான். சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. சட்டசபையில் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ பேசினால் கூட காட்டுவது இல்லை. 10 மானிய கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்றுகிறார்கள் இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து