முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ.-ன் ஒப்பந்தத்தில் மீண்டும் இடம்பெறுகிறார் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ்?

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதில் முன்னணி வீரர் மீண்டும் இடம்பெறுகிறார்.

ஒப்பந்த பட்டியல்...

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., நடப்பாண்டிற்கான வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளது. அண்மையில் வீராங்கனைகளின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்து விட்டது. இதனால் விரைவில் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதனை முடிவு செய்யும் விதமாக பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் கவுகாத்தியில் நாளை நடைபெறுகிறது. இதில் செயலாளர் தேவஜித் சைகியா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மீண்டும் வாய்ப்பு...

இதில் கடந்த ஆண்டு உள்ளூர் போட்டியில் விளையாட மறுத்ததால் ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தியதால் அவருக்கு பி.சி.சி.ஐ. மீண்டும் வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து