முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்துக்கு எதிராக வெற்றி பெற்றது நிம்மதி: ரிஷப் பண்ட்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

5 விக்கெட்டை...

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ 16.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். 

நிம்மதியளிக்கிறது.... 

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்போட்டியில் வெற்றிபெற்றது நிம்மதியளிக்கிறது. ஒரு அணியாக, கட்டுப்படுத்த முடியாதவற்றில் கவனம் செலுத்த முடியாது, என் வழிகாட்டி கட்டுப்படுத்தக்கூடியவற்றில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார், அதைத்தான் நான் இப்போட்டியில் செய்தேன். பிரின்ஸ் யாதவ் பந்துவீசிய விதத்தைப் பார்க்கும் போது சிறப்பாக இருந்தார். அதேபோல் ஷர்தூல் தாக்கூரும் மிக நன்றாக பந்துவீசினார்.

மூன்றாம் இடத்தில்...

இந்த ஐ.பி.எல் தொடரில் நிக்கோலஸ் பூரனை மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்கியுள்ளது, நாங்கள் அவருக்கு சுதந்திரம் கொடுக்க விரும்புகிறோம் என்பதை உணர்த்துகிறது. ஒருவர் நன்றாக பேட்டிங் செய்து, நமக்காக அற்புதமாக விளையாடும் போது அவருக்கு தேவையான சுதந்திரத்தை நாம் வழங்க வேண்டும். அணி சிறப்பாக முன்னேறி வருகிறது. இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து