முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை வென்ற லக்னோ அணி வீரர்கள்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2025      விளையாட்டு
Lucknow 2025-03-28

Source: provided

ஐதராபாத் : ஐதராபாத்துக்கு எதிராக அபார ஆட்டம்: ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியை லக்னோ வீரர்கள் வென்றனர்.

பந்துவீச்சை தேர்வு...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகன்.... 

பின்னர் 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டத்தில் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் அதிக ரன் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 

ஊதா நிற தொப்பி...

முதலிடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட்டை பின்னுக்கு தள்ளி ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள பூரன் 145 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். இது ஒவ்வொரு ஆட்டத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை ஷர்துல் தாகூர் வசப்படுத்தியுள்ளார். 2 ஆட்டங்களில் ஆடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.2-வது இடத்தில் சென்னை அணியின் நூர் அகமது (4 விக்கெட்டுகள்) உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 days ago
View all comments

வாசகர் கருத்து