எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
இந்நிலையில், வான்கடே மைதானத்தின் திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளருக்கு அபராதம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான முனாப் படேலுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. அவர் எந்த காரணத்திற்காக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் களத்தில் உள்ள வீரர்களுக்கு தன்னுடைய ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் மற்றொரு வீரரை அனுப்ப நடுவர் மறுத்ததால் முனாப் படேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.
பந்துவீச்சு குறித்து ஸ்டார்க்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
கடைசி ஓவர் (20-வது ஓவர்) மற்றும் சூப்பர் ஓவரை அற்புதமாக வீசி டெல்லி அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியது குறித்து மிட்செல் ஸ்டார்க் பேசுகையில், "நான் என்னுடைய திறனை மட்டுமே நம்பி அந்த கடைசி ஓவரை வீசினேன். அதேபோன்று எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு பவுண்டரியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து யார்க்கர் பந்துகளாக வீசினேன். அதிர்ஷ்டமும் என் வசம் இருந்ததால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று கூறினார்.
சூப்பர் ஓவர்: ராணா விளக்கம்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.
சந்தீப் மோசமான சாதனை
ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் உடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரை ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் நான்கு ஒய்டு , ஒரு நோ-பால், நான்கு சிங்கிள், ஒரு போர் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 19 ரன்களை அந்த ஓவரில் கொடுத்திருந்தார்.
ராஜஸ்தான் தோல்விக்கு ஒரு காரணமாக சந்தீப் சர்மாவின் கடைசி ஓவர் அமைந்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் கொடுத்ததன் மூலம் மொத்தமாக 4 ஓவர்களில் 33 ரன்களை தாரை வார்த்தார். வழக்கமாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் திறன் கொண்டவர் சந்தீப் சர்மா. பந்தில் வேகத்தை குறைத்து வீசுவது வழக்கம். நேற்றைய தினம் பந்த சற்று அகலமாக வீச முயன்று தோல்விகண்டார்.
தோல்வி குறித்து சஞ்சு சாம்சன்
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம். ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
நீரஜ் சோப்ரா முதலிடம்
18 Apr 2025தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது.
-
காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
18 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்
18 Apr 2025மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
-
அதிக டாட் பந்துகள்: எதிரணிகளை திணறடிக்கும் சி.எஸ்.கே.வின் கலீல் அகமது
18 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2025
19 Apr 2025 -
வான்கடே மைதானத்தில் 102 சிக்சர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
-
வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியை வென்று மும்பை வரலாற்று சாதனை..!
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.
-
இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Apr 2025சென்னை : உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
-
ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பு: துரை வைகோ திடீர் விலகல்
19 Apr 2025சென்னை : ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
-
நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்: த.வெ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் காணொளியில் விஜய் கலந்துரையாடல்
19 Apr 2025சென்னை : தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாடினார்.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: கீப்பர் செய்த தவறுக்கு நோ பால்
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் வழங்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
-
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா அறிவிப்பு
19 Apr 2025பெய்ஜிங் : சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியிருந்த நிலையில், இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயாராகவுள்ளதாக சீனா
-
கனடாவில் துப்பாக்கி சூடு: இந்திய மாணவி பலி
19 Apr 2025ஒட்டாவா : கனடாவில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி உயிரிழந்தார்.
-
80 ஆயிரம் ஆப்கானியர்களை வெளியேற்றிய பாகிஸ்தான்..!
19 Apr 2025இஸ்லாமாபாத் : ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு: உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வருமா? ம.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பு
19 Apr 2025சென்னை, ம.தி.மு.க.வின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
-
மர்ம நபர்கள் கைவரிசை: குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்
19 Apr 2025சென்னை : சினிமா நடிகையும் பா.ஜ.க. அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
-
நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 Apr 2025ஊட்டி : புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
முர்ஷிதாபாத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஆறுதல்
19 Apr 2025கொல்கத்தா : முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் அவ்வாறு உண
-
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் உயிரிழப்பு
19 Apr 2025சனா : ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஈக்வடார் நாட்டில் பயங்கரம்: சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
19 Apr 2025ஈக்வடார் : ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர்.
-
வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து பலி
19 Apr 2025கோவை : வெள்ளயங்கிரி மலையேறிய இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
19 Apr 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
19 Apr 2025போபால் : மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து
19 Apr 2025சென்னை : நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 3 பேர் காயமடைந்தனர்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 90-க்கும் மேற்பட்டோர் பலி
19 Apr 2025டெய்ர் அல்-பலா (காசா பகுதி) : இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் காசாவில் இரண்டே நாட்களில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.