முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sehwag 2024-05-17

Source: provided

மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.

மோசமான பார்மில்... 

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

நேரம் வந்துவிட்டது...

இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து சேவாக் கூறியதாவது:- ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். 

லெகசி பாதிப்படையும்....

அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.

 ரோஹித்திடம் சொல்லுங்கள்...

யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும். என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து