முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒரு நாள் - இங்கிலாந்து இலங்கை அணியை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

நாட்டிங்ஹாம், ஜூலை. 8 - இலங்கை அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 4 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர்களாக இறங்கிய கேப்டன் குக் மற்றும் கீப்பர் கீஸ்வெட்டர் இருவரும் அபார மாக பேட்டிங் செய்து ரன் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, வேகப் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் மற்றும் டெர்ன்பேச் இருவரும் அபாரமாக பந்து வீசி தலா 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். பிரஸ்னன் மற்றும் பிராட் இருவரும் அவர்களுக்கு பக்கபமலமாக பந்து வீசினர். 

கேப்டன் குக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் கேப்டன் தில் ஷான் தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையே 5 போட்டிக ள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. 

இதன் 4 -வது போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரன்ட் பிரிட்ஜ் மை தானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்றும் கேப்டன் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். அந்த அணி இறுதியில் 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னில் சுருண்டது. இலங்கை அணி தரப்பில், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித் தனர்.  

முன்னாள் கேப்டன் சங்கக்கரா அதிகபட்சமாக, 107 பந்தில் 75 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடங்கும். இறுதியில் அவர் டெர்ன்பேச் வீசிய பந்தில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்தபடியாக, ஆல்ரவுண்டர் மேத்யூஸ், 49 பந்தில் 39 ரன்னை எடுத் தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிரஸ்னன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறி னார். தவிர, ரன்டிவ் 18 ரன்னையும், மென்டிஸ் 11 ரன்னையும் எடுத்த னர். 

இங்கிலாந்து அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 24 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். டெர்ன்பேச் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பிரஸ்னன் மற்றும் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி பின்பு ஆட்டத்தை துவக்கியது. அந்த அணி 55 ரன் எடுத்து இருந்த போது, மழை சிறிது நேரம் குறுக்கிட்டதால் அந்த அணி 171 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. 

இங்கிலாந்து அணி இறுதியில் 23.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 171 ரன்னை எடுத்தது. இதனால் அந்த  அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் குக் மற்றும் கீஸ்வெட்டர் இருவ ரும் அதிரடியாக பேட்டிங் செய்தனர். கேப்டன் குக் அதிகபட்சமாக, 75 பந்தில் 95 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந் தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். 

கேப்டன் குக்குடன் இணைந்து ஆடிய கீப்பர் கீஸ்வெட்டர் 68 பந்தில் 72 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 171 ரன் சேர்த்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக குக் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்