முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி யூனியன் பிரதேசம் என்பதை சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது - முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கருத்து

புதன்கிழமை, 4 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி யூனியன் பிரதேசம் என்பதை சுப்ரீ்ம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

மேல்முறையீடு

யூனியன் பிரதேசமான டெல்லியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் எழுந்ததை அடுத்து இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. ஆம் ஆத்மி அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பான ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. டெல்லியில்  நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது. ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் அவசியமல்ல என்று தீர்ப்பளித்தது.
இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி  ஷீலா தீட்சித் செய்தியார்களிடம் கூறியதாவது:

பிரச்சினை எழவில்லை

உச்சநீதிமன்றம் கூறியது மிகவும் தெளிவான கருத்து என்று நினைக்கின்றேன். சட்டப்பிரிவு (239 ஏஏ) படி டெல்லி மாநில அரசு அல்ல. யூனியன் பிரதேசம் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. டெல்லி அரசும், துணை நிலை ஆளுநரும் இணைந்து செயல்படாவிட்டால் டெல்லி பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடம். டெல்லியை காங்கிரஸ் 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய போது எந்த பிரச்சனையும் எழவில்லை எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து